சிலாங்கூர் லீக் கிண்ணப் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் புத்ரா பெர்வீரா கிளப் – எஸ்.ஏ. யுனைடெட் பலப்பரீட்சை

சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலாங்கூர் லீக் கிண்ணப் போட்டி இப்போது அரையிறுதி சுற்றில் கால் பதித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனிக்கிழமை புக்கிட் ஜெலுத்தோங் அரங்கில் மாலை 5 மணிக்கு நடக்கும் விறுவிறுப்பான கால் இறுதி ஆட்டத்தில் ஷா ஆலம் ஸ்ரீமுடாவைச் சேர்ந்த புத்ரா பெர்வீரா கிளப்பை எதிர்த்து எஸ் ஏ.யுனைடெட் கிளப் மோதுகிறது

நாட்டில் தலைசிறந்த கிளப்பாக விளங்கிக் கொண்டிருக்கும் புத்ரா பெர்வீரா கிளப்பை பிரகாஷ் வழிநடத்தி வருகிறார்.

சனிக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற முடியும் என்று பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவிட் தாக்கத்தினால் லீக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாமல் போன புத்ரா பெர்வீரா இப்போது மீண்டும் அதிரடிக்கு திருப்பி உள்ளது.

செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா தியாகராஜன், பூச்சோங் எண்டி, வேலு,சுபாங் ஜெயா சிவா ஆகியோர் முழு ஆதரவு வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles