


புக்கிட் செலாம்பாவ்,ஆக 4-
கெடா மாநிலத்திற்கு இன்று வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கினார்.
இன்று காலையில் புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத் தொகுதிற்கு வருகை புரிந்த அவர், கெஅடிலான் கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகம் ரெங்கசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
கடந்த தேர்தலில் புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சண்முகம் தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.
புக்கிட் செலாம்பாவ் பக்கத்தான் ஹராப்பான் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வாக்காளர்கள் சண்முகத்தை வெற்றி பெற செய்யும்படி மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
இன்றைய நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் அணி திரண்டு சண்முகத்திற்கு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

