கெடா மாநிலத்தில்புதிய ஆட்சி மலர பக்கத்தான் – தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

அலோர் ஸ்டார் ஆக 5
கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி மலர கெடா மாநில மக்கள் திரண்டு வந்து பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும்படி மனித வள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) மற்றும் பாரிசான் நேஷனல்
(தேசிய முன்னணி) கூட்டணி அரசாங்கம் இப்போது வலுவானதாகவும்,
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மற்றும் நாட்டை மேம்படுத்தும் திறன்
கொண்டதாகவும் விளங்குகிறது.

ஆகவே கெடா மாநிலத்தில் புதிய ஆட்சி மலர புதிய மாநில அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.

கெடா மாநிலத்தில் Dun Derga சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் Tan Kok Yew மற்றும் கோத்தா டாருல் அமான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் Teh Swee Leong, புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சண்முகம் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் தீவிர பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles