



சுங்கை பட்டாணி, ஆக.5-
கெடா மாநிலத்தில் மிகவும் பிரபலமான சுங்கை பட்டாணி தாமான் துங்கு ஹமினா என்ற இடத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ருத்ர மாரியம்மன் ஆலயத்தில் நேற்று ஆடி வெள்ளி பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் நாடு தழுவிய அளவில் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை கோலகலமாக நடைபெற்றது.
அந்த வகையில் சுங்கை பட்டாணி ஸ்ரீருத்ர அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி வெள்ளி சிறப்பு பூஜையில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.
கெடா புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் வேட்பாளர் சண்முகம் ரெங்கசாமி உப்பட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

