பினாங்கு மாநிலத்தை மீண்டும் பக்கத்தான் ஹராப்பான் கைப்பற்றும்! பால நம்பியார் கணிப்பு

பட்டர்வொர்த் ஆக 5 –
பினாங்கு மாநிலத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பினாங்கு மாநில கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி.பாலநம்பியார் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி மிகவும் பாராட்டுக்குரியது.

அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லும் பினாங்கு மாநில பக்கத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பினாங்கு மாநில கலை கலாசார இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மனித வள அமைச்சர் வ சிவகுமார், பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் இயோ, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன், மலேசிய குற்றச் செயல் தடுப்பு ஆணையத்தின் வாரிய உறுப்பினர் டத்தோஸ்ரீ புலேந்திரன், பிரிமாஸ் தலைவர் சுரேஸ், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பத்து ஊபான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் குமரேசன் ஆறுமுகத்தை ஆதரித்து பாலநம்பியார் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles