


கப்பளா பத்தாஸ் ஆக 5 –
சொக்சோ நிறுவனத்தின் Myfuture Jobs வேலை வாய்ப்பு சேவைகள் மூலம் 884,688 மலேசியர்கள் வெற்றிகரமாக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று அறிவித்தார்.
வேலை வாய்ப்பு ந
பெற்றவர்களில் 72,374 பேர்
பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில் அங்கு 32,711 பேர் பெண்கள் ஆவர்.
இன்று பினாங்கு கப்பளா பத்தாஸ்
மிலேனியம் மண்டபத்தில் நடைபெற்ற மனித வள அமைச்சின் ஆதரவோடு நடைபெற்ற சொக்சோவின் Myfuture Jobs festival நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இரண்டு நாள் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியை
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 30 க்கும் மேற்பட்ட முதலாளிகள் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
MYFutureJobs வேலை வாய்ப்பு வழி மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
வேலை தேடுபவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி பெரும் துணை புரிகிறது என்று அவர் சொன்னார்.
சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

