சொக்சோ இல்லத்தரசிகளின் பாதுகாப்பு திட்டத்தில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 425 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர்

கப்பளா பத்தாஸ் ஆக 5 –
இல்லத்தரசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டது.

Skim Keselamatan Sosial Suri Rumah எனப்படும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 425 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று அறிவித்தார்.

பி-40 பிரிவைச் சேர்ந்த 1 லட்சத்து 66,666 இல்லத்தரசிகளும் இதில் அடங்குவர் என்று அவர் சொன்னார்.
.
பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 11,32 பேர் இந்த திட்டத்தில் பங்களித்துள்ளனர்.

சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் கணவர்களும் தங்கள் மனைவிகள் சார்பாக பங்களிப்பு செய்யலாம்.

ஒரு ஆண்டுக்கு 120 வெள்ளி மட்டுமே என்று இன்று பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாஸில் நடைபெற்ற Myfuture Jobs வேலை வாய்ப்பு கண்காட்சி நிகழ்வின் போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles