ஒற்றுமையை சீர்குலைக்கும் கட்சிகளை புறக்கணியுங்கள்! வாக்காளர்களுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

ஸ்ரீ மூடா, ஆக 7-
நாட்டில்
ஒற்றுமையை சீர்குலைக்கும் கட்சிகளை நிராகரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வாக்களிக்கும்படி மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இணைந்து சிறப்பான முறையில் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சியை நடத்தி வருகிறது.

இதை விரும்பாத சில கட்சிகள் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இனத்துவேச ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கட்சிகளை மக்கள் புறக்கணிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலம் உட்பட ஆறு மாநிலங்களை காப்பாற்றுவதற்கு மாநில மக்கள் ஒன்று திரள வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் பிளவுபட்டும் சதா சச்சரவுகளில் ஈடுபட்டால் எந்தவொரு
மாநிலமும் மேம்பாட்டையும் எழுச்சியையும் காண இயலாது

பிரச்சனைகளை உருவாக்குவது, அரசாங்கம் மற்றும் பிரதமரை
மாற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட எதிர்க்கட்சியினரின் விஷமப்
பிரசாரத்தில் மதிமயங்காமல் ஹராப்பான்-பாரிசான் நேஷனல்
வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும்படி அவர் பொது மக்களை கேட்டுக்
கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் சம்பூநாதனை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.

ஷா ஆலம் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் வாக்காளர்களை இவ்வாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles