

ஸ்ரீமுடா, ஆக 7-
2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ஹராப்பான் சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வருகிறது.
பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் சிலாங்கூர் மாநிலம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்துள்ளது.
அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற திரண்டு வந்து வாக்களியுங்கள் என்று மனிதவள் அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி மலர வேண்டும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பிரகாஷ் சம்பூநாதனை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.
நாடறிந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங்குடன் இணைந்து பணியாற்றும் வழக்கறிஞர் பிரகாஷ் ஒரு துடிப்பான இளைஞர் என்று அவர் வர்ணித்தார்.
அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லும் பக்குவம் கொண்ட பிரகாஷ் சிறந்த வேட்பாளர்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி பக்கத்தான் ஹராப்பான் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க மக்கள் திரண்டு வந்து வாக்களியுங்கள் என்றார்.
ஷா ஆலம் ஸ்ரீமுடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கணபதிராவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

