


ஷா ஆலம், ஆக 7-
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வெற்றிக்கு ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானது மற்றும் விலை மதிப்பில்லாதது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல் மிகவும் சவாலாக அமைந்தாலும் கண்டிப்பாக பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணியை வெற்றி பெற செய்யுங்கள்.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்களிப்பு தினத்தில் மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.
நான் வாக்களிக்கவில்லை என்றாலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்று யாரும் நினைக்கக்கூடாது.
ஒவ்வொரு வாக்கும் விலை மதிப்பில்லாதது என்பதால் ஆறு சட்டமன்ற தேர்தலில் மக்கள் திரண்டு வந்து வாக்களித்து பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வெற்றி பெற செய்யும்படி நேற்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்

