மை பெமிலி நெட்வொர்க் சார்பில் சமூக சேவையாளர்களுக்கு சிறப்பு

மைபெமிலி நெட்வொர்க் சார்பில் நீண்ட காலமாக பொது
தொண்டில் ஈடுபட்டிருக்கும் லெம்பா பந்தாய் கெஅடிலான் உதவித் தலைவர் எஸ் பக்தச்சலம், செலாயாங் பாசார் பூரோங் இந்தியர் காய்கறிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் மணிச்செல்வம், தொழிலியல் நீதிமன்ற வழக்கறிஞர் ஹரிராமன், டத்தோ அலெக்ஸ் ஆகியோருக்கு நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் மூத்த அரசியல்வாதி டாக்டர் பி எஸ் பிள்ளை மற்றும் புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் தலைமையில் சிறப்பு செய்யப்பட்டது.

மணிமன்றத்தின் மூலம் தனது மக்கள் சேவையை தொடங்கிய பக்தவச்சலம் பின்னர் மக்கள் தொண்டன் டாக்டர் டேவிட் மூலம் அரசியலில் கால் பதித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக லெம்பா பந்தாய் கெஅடிலான் உதவித் தலைவராக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.

டாக்டர் மணிச்செல்வம், டத்தோ அலெக்ஸ் மற்றும் ஹரிராமன் ஆகியோரும் சமுதாயத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிறந்த நாளை கொண்டாடிய டத்தோ டாக்டர் ஜெகா, டத்தின் ராம்குமாரி, குமாரி திலாகா, டாக்டர் ரவி பிஜேகே, மூத்த அரசியல்வாதி பார்லிமெண்ட் செல்வராஜ், டாக்டர் ஜோக்கிம், செராஸ் கிருஷ்ணன் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பல முக்கிய பிரமுகர்கள் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles