



சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை ரமால் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் அமானா வேட்பாளர் ஹாஜி மஸ்வான் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்வார்கள் என்று பாங்கி ரூக்குன் தெத்தாங்கா தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
பாங்கி வட்டாரத்தில் உள்ள 1,200 இந்தியர்கள் வாக்குகள் கண்டிப்பாக பக்கத்தான் ஹராப்பானுக்கு முழுமையாக ஆதரவை வழங்குவார்கள் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் சிறந்த முறையில் ஆட்சியை புரிந்து இந்தியர்களுக்கு பெரும் உதவிகளை புரிந்துள்ளது.
அந்த வகையில் பாங்கி வட்டாரத்தில் உள்ள இந்தியர்கள் ஆதரவு கண்டிப்பாக பக்கத்தான் ஹராப்பானுக்கு முழுமையாக கிடைக்கும் என்றார் அவர்.
இன்று பாங்கி வட்டாரத்தில் சுங்கை ரமால் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமானா வேட்பாளர் ஹாஜி மஸ்வானை ஆதரித்து மிக பெரிய அளவில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
காஜாங் கவுன்சிலர் பாலமுரளி, பாங்கி மகா மாரியம்மன் கோவில் தலைவர் பன்னீர் செல்வம், சேகர், பாங்கி ரூக்குன் தெத்தாங்கா தமிழ் செல்வம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

