

ஷா ஆலம், ஆக 7-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலேசியர்கள் தொடர்ந்து முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தில் மதிமயங்கி விடாதீர்கள்.
மலேசியர்கள் ஒற்றுமையுடன் வாழந்தால் மட்டுமே சுபிட்சம் நீடிக்கும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்போது அதிக அளவில் முதலீடு செய்ய முன் வருகிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறந்த முறையில் நாட்டை வழிநடத்தி வருகிறார்.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையிலான ஒற்றுமை அரசாங்கம் மக்களை அரவணைத்து ஆட்சி புரிந்து வருகிறது.
வெறுப்புணர்வை தூண்டும் அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அமோக வெற்றி பெற வாக்களிக்கும்படி கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
இதனிடையே நேற்று கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூசையில் மனிதவள அமைச்சர் சிவகுமாரும் பிரகாஷும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

