

கோப்பேங், செப் 3-
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள Kopisan, Gopeng இல் இன்று சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ சிவகுமார் 50 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.
Kopisan, Gopeng ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பி-40 பிரிவைச் சேர்ந்த 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேரடியாக மனிதவள அமைச்சரிடம் உணவு கூடைகளை பெற்றுக் கொண்டனர்.
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

