


மெங்கெலும்பு, செப் 3-
பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து உதவிகளை வழங்கி வரும் மனித வள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று மெங்கெலும்பு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி கரம் நீட்டினார்.
நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய பத்து காஜா ஜசெக மற்றும் கோவில் நிர்வாகத்தினரை அமைச்சர் சிவகுமார் வெகுவாக பாராட்டினர்.
இந்த நிகழ்வில் மாணவி
Shegitha A/p Kalaichelvan என்பவருக்கு அமைச்சர் சிவகுமார் மடிக் கணினியை வழங்கினார்.
அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில் மாணவி சங்கீதா 9ஏ பெற்று இப்போது பாங்கி
UKM பல்கலைக்கழகத்தில் Asasi Pintar Jurusan Sains துறையில் பயன்று வருகிறார்.
தொடர்ந்து Biomedicine துறையில் மேற்கல்வியை கற்க விரும்பும் மாணவி சங்கீதாவுக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்த மடிக்கணினியை வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

