
கோலாலம்பூர், செப் 3-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நாளை திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு மேல் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு சிறப்பு வருகை புரிகிறார்.
பிரதமரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை பிரதமரை வரவேற்க இந்தியர்கள் திரண்டு வந்து ஆதரவு தரும்படி மனித வள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

