பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் 200 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

பத்துகாஜா, செப் 2-
புத்ரா ஜெயாவில் மனிதவள அமைச்சின் பணிகளுக்கு இடையே அமைச்சர் வ சிவகுமார் இன்று தனது பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கி 200 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.

பத்து காஜா பிளாசா பாருவில் இன்று காலையில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சிவகுமார் பி.-40 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கு உணவு கூடைகளை வழங்கினார்.

கடந்த மூன்று பொதுத் தேர்தலில் தம்மை அமோக வெற்றி பெற செய்த பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.

தொகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர் அடிக்கடி பத்து காஜா நாடாளுமன்ற தொகுதிக்கு வருகை புரிந்து உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்ச்சியில்
Steven Tie Tee Siang ( ADUN Tronoh) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles