பொருளாதார வளர்ச்சிக்கு மனித மூலதனம் முக்கிய பங்காற்றுகிறது!பயிற்சித் திட்டங்கள்மதிப்பீட்டு செய்வது பாராட்டுக்குரியது – அமைச்சர் சிவக்குமார் அறிவிப்பு

    கோலாலம்பூர், செப் 5-
    மனித மூலதனம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

    அந்த வகையில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க தொழில் பயிற்சிகள் துணை புரிகிறது.

    அந்த வகையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பயிற்சித் திட்டங்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

    அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ள எச்ஆர்டி கோர்ப்பிற்கு எனது வாழ்த்துகளை அவர் தெரவித்து கொண்டார்.

    எச்ஆர்டி கோர்ப்பின் தேசிய பயிற்சி குறியீட்டை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி.

    மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப், லெவி கட்டண வசூலிப்பு நிறுவனமாக விளங்குகிறது.

    அதே வேளையில் திறன் மேம்பாட்டிற்காக முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் என பல்வேறு பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பயிற்சிகள் அனைத்தும் அதன் இலக்குகளை அடைகிறதா என்பது குறித்து முழுமையான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும்.

    இந்த மதிப்பீடுகளின் வாயிலாக அடுத்தக்கட்ட பயிற்சி திட்டங்கள் இன்னும் சிறப்பான முறையில் செய்ய முடியும்.

    இதன் அடிப்படையில் எச்ஆர்டி கோர்ப் தேசிய பயிற்சி குறியீட்டை அறிமுகம் செய்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.

    2022ஆம் ஆண்டுக்கான பயிற்சி மதிப்பீட்டு அறிக்கையையும் எச்ஆர்டி கோர்ப் வெளியிட்டுள்ளது.

    எச்ஆர்டி கோர்ப்பின் இம்முயற்சி மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    தென்கிழக்காசியாவிலேயே தேசிய பயிற்சி குறியீட்டு திட்டத்தை எச்ஆர்டி கோர்ப் மேற்கொண்டிருக்கிறது.

    இது தான் எச்ஆர்டி கோர்ப்பின் சாதனை என்று அமைச்சர் சிவக்குமார் கூறினார்.

    இன்று நடைபெற்ற எச்ஆர்டி கோர்ப் தேசிய பயிற்சி குறியீட்டு திட்ட அறிமுக விழாவில் அதன் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், மனிதவள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜைய்னி உஜாங் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Articles