மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையில் எம்.சி.எஸ் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 365 மாணவர்கள் பட்டம் பெற்று மகிழ்ந்தனர்

சிப்பாங், செப் 8-
மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தலைமையில் நேற்று எம்.சி.எஸ். (College MCS) கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைப்பதிலும் சிறப்பாகப் படிப்பை முடித்த 365 பட்டதாரிகளின் புகழ்பெற்ற சாதனைகளைக் கொண்டாடுவதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்த வெற்றியை அடைவதற்கு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட பட்டதாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கல்வியை பின் தொடர்வதில் உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஒர் சான்று.

நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற உங்களை அழைக்க அழைக்கிறேன்.

நாட்டின் வளர்ச்சியில் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்ய வெளியுலகம் உங்களது திறமைகளையும் திறன்களையும் எதிர்பார்க்கிறது.

சமூகம் மற்றும் தொழில்துறைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தின் முகவராக நீங்கள் இருங்க வேண்டும்.

தொழில்துறை மற்றும் நாட்டிற்கான சிறந்த திறமைகளை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பிற்காக MCS கல்லூரியின் நிர்வாகத்திற்கும், விரிவுரையாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles