


ஈப்போ செப் 7-
பேராக் மாநிலத்தில் ஈப்போ பாலிம் இயோன் பேராங்காடியில்
அனைத்தலக இந்திய வர்த்தக கண்காட்சியை மனித வள அமைச்சர் வ சிவகுமார் நேற்று
அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் .
இதன் ஏற்பாட்டாளர்களான “கலர்ஸ் ஓப் இந்தியா மற்றும் அனைத்துலக வர்த்தக கண்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
கடந்த 2018-இல் சிறு அங்கமாக தொடங்கிய இந்த நிகழ்வு இப்பொழுது 5ஆம் ஆண்டாக பேராக் மாநில மக்களிடையே வெற்றி நடை போடுகிறது.
இந்த வர்த்தகக் கண்காட்சி வாயிலாக வியாபார வாய்ப்பு இந்திய வர்த்தகர்களுக்கு வழங்கப்படுகிறது.
60க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இதில் வியாபாரம் செய்கின்றனர். இதனால் வியாபாரம் பெருகுகிறது.
நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மலிவான விலையில் தரமான பொருட்கள் மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.
அத்துடன், கேளிக்கை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறுவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி, தனித் திறன் போட்டி , சிறார்கள் திறன்களை வெளிப்படுத்துதல், ஆடை அலங்கார போட்டிகள் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.
சத்தியா ஏற்பாடு செய்திருக்கும் இந்த அனைத்துலக இந்திய பெருவிழா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

