
கோலாலம்பூர் செப் 11-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்து பல சலுகைகளை அறிவித்தார்.
இந்த 12 ஆவது மலேசிய திட்டம் அனைத்து இன மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வரும்.
குறிப்பாக மலேசிய இந்திய சமுதாயம் 12 ஆவது மலேசிய திட்டத்தில் கைவிடப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்த்துள்ளார்.
அனைத்து இன மக்களையும் உள்ளடங்கிய வகையில் இந்த 12 ஆவது மலேசிய திட்டம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த 12 ஆவது மலேசிய திட்டத்தை வடிமதைத்துள்ளது என்று இன்று நாடாளுமன்றத்தில் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

