பேராக் ஈப்போ தமிழ் சேவை சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளி மானியம்

ஈப்போ, செப் 11-
பேராக் ஈப்போ தமிழ் சேவை சங்கம் தொடர்ந்து ஆக்கரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

கடந்த வாரம் பேராக் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் சிவகுமார் கலந்து கொண்டார்.

அந்த வகையில் பேராக் ஈப்போ தமிழ் சேவை சங்கத்தின் தலைவர் க. ரவிச்சந்திரன் தலைமையிலான பொறுப்பாளர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்.

பின்னர் தமது சார்பில் 10,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.

பேராக் மாநிலத்தில் இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு தமிழ் சேவை சங்கம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதற்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் சிவகுமாரின் மானியம் பெரும் உதவியாக இருக்கும் என்று ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles