தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சியை (NHCCE) 2023 மனிதவள அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், செப் 12-
தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சி (NHCCE) 2023 வெளியீட்டு விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சிறப்பு வருகை புரிந்து இந்த கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NHCCE 2023 இன் அமைப்பு, நிறுவனங்கள் மற்றும் மனிதவள (HRD Corp) பயிற்சியாளர்கள், எப்போதும் மாறிவரும் நவீன பணியிடத்தின் சவால்களைச் சந்திப்பதில் முன்னோக்கி இருக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள பணியிட சூழ்நிலையில், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும், மாற்றத்தை ஊக்குவிக்கவும், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்காலத்தை மேலும் நிலையானதாகவும் வலுவாகவும் மாற்றுவதற்கான இது சரியான நேரம் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.

இந்த விழாவில் மனித வள துணை அமைச்சர் முஸ்தபா சக்முட், HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா ஷாஹுல் தாவூத், மனித வள அமைச்சகத்தின் அதிகாரிகள், பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles