

கூச்சிங், செப் 16-
நாட்டில் நமது இந்தியர்கள் ஈடுபட்டிருக்கும் தொழில் துறைகளை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு நிச்சயம் உதவி புரிவேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
சரவாக் கூச்சிங்கில் நடைபெறும் Selamat Menyambut Hari Malaysia தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கிய 14 ஆண்டுகால அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து இந்திய உணவகங்கள் எதிர் நோக்கிய அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கும் ஒரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இந்தியர்களின் தொழில் துறைகள் தொடர்ந்து சிறப்பாக இயங்குவதற்கு உதவி புரிவேன் என்று அவர் சொன்னார்.