

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சிறப்பு வழிபாட்டுடன் கூடிய கௌரவிப்பு நிகழ்வை புக்கிட் கெமுனிங் 8ஆவது மைல், ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அந்த மூன்று தலைவர்களுக்கும் ஆலயத்தின் சார்பாக மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
ஆலயத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை நாடறிந்த மக்கள் சேவையாளர்ஸடத்தோ கணேசன் மற்றும் அவரது குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்.
அண்மையத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வேட்பாளர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மற்றும் டத்தோ ஜோ சரவணன் தெரிவித்தார்
மேலும், வட்டார அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்வதையும் வட்டாரப் பிரச்சனைகளை தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதையும் இந்த நிகழ்வு நோக்கமாக கொண்டிருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கணபதிராவ், ராய்டு, பிரகாஷ் ஆகியோர் இந்த சிறப்பு வழிபாட்டை ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்தினருக்கும் டத்தோ கணேசன் மற்றும் டத்தோ ஜோ சரவணனுக்கும் நன்றியைதெரிவித்துக் கொண்டனர்.
இதனிடையே இந்த நிகழ்வில் சமூக சேவையாளர் டத்தோ கணேசன் தமது சார்பில் சிம்பாங் அம்பாட் தமிழ்ப் பள்ளிக்கு 5,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.