கிராமப்புறங்களில் இந்திய இளைஞர்களுக்குTVET தொழில் திறன் பயிற்சி திட்டங்கள்!

கிராமப்புறங்களில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு
TVET தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.

மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் (MIYC) தனேஷ் பசிலின் தலைமையிலான பேராளர்கள் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

MIYC துணைத் தலைவர் திரு. சஞ்சய் சங்கரன், பயிற்சி மற்றும் திறன் பணியகத்தின் தலைவர் திரு. சதீஷ் குமார் ராமு மற்றும் MIYC அனைத்துலக பணியகத்தின் தலைவர் திரு. பீஷ்மிந்தர் பால் சிங் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள இந்திய இளைஞர் சமுதாயத்திற்கு TVET திறன்கள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்கான திட்ட திட்டமிடல் குறித்து விரிவாக பேசப்பட்டது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் நோக்கம், இந்திய இளைஞர்களுக்கு TVET திறன்கள் வழங்கும் பல்வேறு கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து, அவர்களுக்கு எதிர்கால வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்குவதாகும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் போதுமான ஆதரவுடன், அதிகமான இளைஞர்கள் TVET திறன்களில் ஈடுபடுவார்கள்.
மேலும், இந்தத் துறையில் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத்தில் முதல் கட்டமாக இந்திய இளைஞர்களுக்கு TVET தொழில் திறன் பயிற்சிகள் தொடங்கப்படும். தொழில் பாதுகாப்பு சுகாதார கழகத்துடன் இணைந்து மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் பயிற்சியை நடத்தும்.
மேலும், மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்திற்கு 50,000 வெள்ளி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles