ஜெர்மனியின் ஒற்றுமை வரவேற்பு தின விழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார்

கோலாலம்பூர்,அக். 4-
பெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி தூதரகத்தால் நேற்று Petaling Jaya Performing Art Centre, One Utama வில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜெர்மனி ஒற்றுமை நாள் ( Day of German Unity) கொண்டாட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

மீண்டும் இணைந்த ஜெர்மனியின் குறிப்பிடத்தக்க பயணத்தை கொண்டாடும் வகையில் ஜெர்மனி ஒற்றுமை வரவேற்பு தினத்தில் மலேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பெரிய கௌரவமாகும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

ஜெர்மனி ஒற்றுமை தினம் அல்லது Tag der Deutschen Einheit கடந்த அக்டோபர் 3, 1990 அன்று கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஒரு நாடாக இணைந்த வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசாங்கத்தின் சார்பாக, ஜெர்மனி ஒற்றுமை தினத்தை கொண்டாட அனைத்து ஜெர்மனியர்களுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles