
புத்ரா ஜெயா, அக் 4-
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் வரும் அக்டோபர் 7 ஆம் சனிக்கிழமை Mydin Pulau Sebang Hypermarket Tampin, Melaka வில் ஜெலாஜா மடானி நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்வை மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் உட்பட மலாக்கா மாநில அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp, சொக்சோ, டேலாண்ட் கோர்ப், நியோஸ், மனிதவள மேம்பாட்டு கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெறுகிறது.
வேலை வாய்ப்பு கண்காட்சி, இலவச மருத்துவ பரிசோதனை, தொழில் திறன் பயிற்சிகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றுள்ளது.
மலாக்கா வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

