
உள்நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளும் முதலாளிகளை ஊக்குவிக்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
மனிதவள அமைச்சின் முயற்சிகளை ஆதரிக்க ‘உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அவர் முதலாளிகளை கேட்டுக் கொண்டார்.
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் இன்று மலாக்காவில் ஜெலாஜா மடானி நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
Kempen Ambil Pekerja Lokal எனப்படும் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வது மற்றும் வேலையின்மை விகிதத்தை குறைப்பதில் மனித வள அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சொக்சோ நிறுவனத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் , நாட்டின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வேலை தேடுபவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி ஊக்கமளிக்கிறது
முதலாளிகள் அந்த வயது வரம்பிற்குள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் .
MYMid Career 40 திட்டத்தின் மூலம் குறிக்கோளுக்கு ஏற்ப இது செய்யப்படுகிறது .
அனைவருக்கும் வேலைவாய்ப்பு சேவைகளை வழங்கும் SOCSO நிறுவனத்தின் பணிகளை பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.
நாடு முழுவதும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்
292 SOCSO MYFutureJobs செயற்கைக்கோள் மையங்களை உருவாக்கி உள்ளது.
இந்த மையத்தின் பங்கு உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதாகும்.
சிறப்பு நேர்காணல்
மொத்தம் 12340 பேர் வெற்றிகரமாக வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
இன்று மலாக்காவில் நடைபெற்ற ஜெலாஜா மடானி விழாவில் HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட், , நியோஸ் தலைமை செயல் முறை அதிகாரி ஆயோப், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

