


பூலாவ் செபாங்,அக்.8
மலாக்கா மாநிலத்தில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கி வரும் மலாக்கா பூலாவ் செபாங் தமிழ்ப் பள்ளியில் பேட்மிண்டன் கோர்ட் மண்டபம் கட்டுவதற்கும் 50,000 வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வாக்குறுதி அளித்தார்.
பூலாவ் செபாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பேட்மிண்டன் போட்டியில் சிறந்த விளங்க பேட்மிண்டன் கோர்ட் தேவைப்படுவதாக பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கங்கா ரெங்கசாமி கோரிக்கையை முன் வைத்தார்.
இவரின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளியை வழங்குவதாக பலத்த கைத்தட்டலுக்கு இடையே அவர் அறிவித்தார்.
பூலாவ் செபாங் தமிழ்ப் பள்ளியில் 142 மாணவர்கள் பயில்கின்றனர்.
கால்பந்து உட்பட பல போட்டிகளில் பூலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
தற்போது பூலாவ் செபாங் தமிழ்ப் பள்ளிக்கு பேட்மிண்டன் கோர்ட் உடனடியாக தேவைப்படுவதால் பேட்மிண்டன் கோர்ட் அமைக்க 50,000 வெள்ளியை வழங்குவதாக அவர் அறிவித்தார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குணா, பள்ளி வாரிய உறுப்பினர் ராமா, மனித வள அமைச்சின் சொக்சோ அதிகாரி மகேசன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

