
கோலாலம்பூர், அக்.10-
தனியார் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் பிரச்சனைக்கு நாளை நல்ல முறையில் தீர்வு காணப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று தெரிவித்தார்.
இந்த பிரச்சனையை அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது . நாளை நடக்கும் வாரிய கூட்டத்திற்கு பின்னர் இதற்கு
நல்ல முறையில் தீர்வு காணப்படும் என்றார் அவர்.
PTPK நிதிக் கழகத்தில் உள்ள “தொழில்நுட்பச் சிக்கல்கள்” காரணமாக, நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) நிறுவனங்களில் படிக்கும் 2,000 முதல் 3,000 மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்று நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான தனியார் TVET நிறுவனங்களும் புதிய மாணவர்களை பதிவு செய்ய முடியாமல் கடந்த வாரம் முதல், மாணவர்களுக்கான நிதி தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது .
இந்த பிரச்சனைக்கு எல்லாம் நாளை தீர்வு காணும வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்

