
கோலாலம்பூர் அக் 16-
பதவியில் இருக்கும் காலத்தில் நானும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் ஒருபோதும் இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
பதவியில் இருக்கும் காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு நன்மைகளை செய்வோம்.
ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம் என்று நேற்று டான்ஸ்ரீ சோமா அரங்கில் ஆதி குமணன் வரலாற்று நூலை வெளியீடு செய்து உரையாற்றியபோது அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க மானியங்கள் முறையாக சமுதாயத்திற்கு சேர வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2024 பட்ஜெட்டில் அனைத்து இனங்களும் நன்மை அடையும் வகையில் உள்ளது.
குறிப்பாக மித்ராவுக்கு 100 கோடி வெள்ளி, இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு 5 கோடி வெள்ளி, தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
அனைத்து இன மொழி பள்ளிகளும் மறுசீரமைப்பு செய்யும் வகையில் மிகப் பெரிய தொகையை பிரதமர் ஒதுக்கி உள்ளார்.
இதில் தமிழ்ப் பள்ளிகளும் மிகப்பெரிய அளவில் நன்மை அடையும் என்று அவர் சொன்னார்.

