மலேசிய முத்தமிழ் சங்கத்திற்கு 50,000 வெள்ளி வழங்குவதாக அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் அக் 30-
தெலுக் இந்தான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். மனோகரன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட மலேசிய முத்தமிழ் சங்கத்திற்கு 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய முத்தமிழ் சங்கத்தின் தீபாவளி நல்லெண்ண விருந்து நிகழ்ச்சி பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ராக்யாட் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் தலையேற்று உரையாற்றினார் .

மலேசிய முத்தமிழ் சங்கம் இயல், இசை, நாடகம் மொழி இலக்கியம் என்று தமிழ் சார்ந்த துறைகளிலும் நம் வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்களோடு புத்தாக்கம், தொழில்நுட்பம், கணினி துறைகளிலும் சாதனைகள் தொடர வாய்ப்புகளை உருவாக்கி சிறப்பான மேம்பாடுகளை காண வேண்டும் என மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

மலேசிய முத்தமிழ் சங்கத்திற்கு எப்போதும் பக்கப்பலமாக இருந்து உதவிகரம் நீட்டுவேன் என்றார் அவர்.

மலேசிய முத்தமிழ் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எம். மனோகரன், துணை தலைவர் ஞானசேகரன், செயலாளர் க. பன்னீர் செல்வம், துணை செயலாளர் மரினா தேவி, பொருளாளர் சத்தியலிங்கம், தகவல் பிரிவு அதிகாரி சோலை பாஸ்கரன் , செயலவை உறுப்பினர்கள் இராமசாமி, கருப்பையா, நாகேஸ்வரி, கீதா, மித்ரா, நாகேஸ்வரராவ், ஜெகதீஸ்வரன், விஜி அங்கமுத்து, மோசஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி. சகாதேவன், டான்ஸ்ரீ கேவியஸ் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

இதனிடையே மலேசிய
முத்தமிழ்ச் சங்கத் தலைவர் வழக்கறிஞர் மனோகரன் தமது உரையில் மொழி இலக்கியம், கலை கலாச்சார பண் பாடுகள், கல்வி போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, இன்றைய கால பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப நமது இளைய தலைமுறைகளின் வருங் கால வாழ்க்கை நிலையை மாற்றி, புதிய இலக்கு நோக்கி பயணிக்க ஊக்கப்படு த்துவது பெற்றோர்களாகிய நமது கடமையாகும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles