தேசிய மனித மூலதன மாநாடு, கண்காட்சியை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

கோலாலம்பூர் அக் 30
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp ஏற்பாட்டில் நடைபெற்ற
தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சி (NHCCE) Yang Di-Pertuan Agong
Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah Ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta’in Billah இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இன்று காலை மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற இந்த கண்காட்சியில் 4,000 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய மனித மூலதன மாநாடு என்பது சிறந்த உள்ளூர் மற்றும் சர்வதேச பேச்சாளர்களின் கலவையை உள்ளடக்கிய உள்ளூர் மனித வள மேம்பாட்டு சூழ்நிலையின் தரத்தை மேம்படுத்துவதற்கு பொது மற்றும் தனியார் துறையின் முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

திறமையான மேம்பாட்டு நடைமுறைகள் பற்றிய சொற்பொழிவுக்கான பயனுள்ள தளத்தை உருவாக்க ஒரு முக்கியமான மற்றும் அவசியமான அணுகுமுறையாக இது விளங்குகிறது.

எச்ஆர்டி கோர்ப் நிறுவனம் தொடர்ந்து மனித வள அமைச்சின் குரலாகவும், பாலமாகவும் இருக்கும் என்று மனித வள அமைச்சு நம்புகிறது.

இந்தத் தொடர்ச்சியான ஈடுபாடு, அனைத்துத் தொழில்துறை வீரர்களுக்கும் வருமானத்தைத் தரும் கூடுதல் முயற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு வழிகாட்டாகும்.

அதிக வணிக உரிமையாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், மனிதவள வல்லுநர்கள் மற்றும் பலரை நோக்கி தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த எங்கள் பிரதிநிதிகளுக்கு NHCCE ஒரு சிறந்த தளமாகப் பார்க்கப்படுகிறது.

HRD Corp இன் 30ஆவது ஆண்டு நிறைவையொட்டி, இந்த ஆண்டு ஒரு பெரிய மற்றும் சிறந்த தேசிய மனித மூலதன கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் மற்றும் மனித வள மேம்பாட்டுக் கழகத்தில் (HRD Corp) அனைவரையும் பெரிதும் பாராட்டுகிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles