தீபாவளிக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை கல்வி அமைச்சு கருத்தில் கொள்ளுமா!?

எதிர் வரும் தீப திருநாளை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி மேலும் ஒருநாள் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 தே‌தி ஞாயிற்று கிழமை கொண்டாடப் படவிருப்பதால் மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அமைந்து விட்டது,

இருந்தபோதும் வெளிமாநிலத்தில் குறிப்பாக ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ளவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் செலவளிக்கும் நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை கல்வி அமைச்சர் படிலா சிடிக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அதே நேரத்தில் குடுப்ப உறவை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த தீப திருநாள் ஒரு தளமாக அமைத்து கொடுக்க அரசாங்கம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இந்திய சமுதாயம் எதிர்பார்ப்பதாக
திரு சந்திர சேகரன் தனது அறிக்கையின் வாயிலாக கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles