
கோலாலம்பூர் நவ.1,
நியோஸ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு – சுகாதார கழகம் மற்றும் மித்ராவுடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களுக்கான தொழில் திறன் கல்வி பயிற்சி திட்டத்தில் இவ்வருடத்தில் 100 பேர் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டுள்ளனர் என மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் Niosh
எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் வழி
பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின் றன.
அந்த வகையில் பிரதமர் துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய உருமாற்ற
கழகம் (மித்ரா) – வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார
கழகம் இணைந்து இந்தியர்களுக்கு பிரத்தியேகமாக வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி திட்டத்தை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்திருப்பதாக அவர் சொன்னார்.
இப்பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு தங்கும்
இடம், உணவு மற்றும் பயிற்சி கொடுப்பனவு இலவசமாக
வழங்கப்படவுள்ளது.
இந்திய இளைஞர்கள் இதுப்போன்ற திறன் கல்வியை பயில வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

