முடிந்தால் எட்டு பேருக்கு உதவி செய்யுங்கள்! முடியாவிட்டால் குறை சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

கோலாலம்பூர், நவ 4-
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களும்
வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளும் அன்பளிப்புகளும் வழங்கி வருகிறது.

ஆனால் உணவுக் கூடைகளை வழங்கி சமுதாயத்தை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் குறைகூறியே வருகிறார்கள்.

குறை கூறும் தரப்பினர் முடிந்தால் எட்டு பேருக்கு உதவி செய்யட்டும்.

உதவி செய்ய முடியவில்லை என்றால் குறை சொல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

உதவி செய்பவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்கள் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவுவதற்கு துணையாக இருங்கங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் இன்று காஜாங்கில் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெயம் நம்நாடு இயக்கம் 800 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles