

காஜாங், நவ 4-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனித வள அமைச்சர் வ சிவகுமார் ஆதரவோடு ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் இன்று 130 குடும்பங்களுக்கு தீபாவளி உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் 800 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு மனிதவள அமைச்சர் சிவகுமார் அவர்கள் ஜெயம் நம்நாடு இயக்கத்திற்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி இருக்கிறார்.
ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் இன்று காஜாங்கில் முதல் கட்டமாக 130 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செல்வராஜா – தமிழ்ச் செல்வி வெள்ளையன் தெரிவித்தனர்.
செமினி, கெப்போங் காஜாங், பாங்கி, பூச்சோங், செர்டாங், டிங்கில், பெட்டாலிங், கேரித் தீவு ஆகிய இடங்களில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கும் உணவு கூடைகள் இந்த வாரத்தில் கொடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜெயம் நம்நாடு இயக்கத்திற்கு மிகப்பெரிய அளவில் பேருதவிகளை செய்த அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று செல்வராஜா – தமிழ்ச் செல்வி தெரிவித்தனர்.
இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் குமரேந்திரன் உட்பட அதன் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் தமது உரையில் 2016 இல் உருவான இந்த இயக்கம் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள், மடிக் கணினியை வழங்கி உதவி புரிந்துள்ளது என்றார்.
கோவிட் காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் அளவில் உதவிகளை வழங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

