புக்கிட் கியாரா வெல்ஃபேர் மற்றும் சமூகநல கிளப்புக்கு 20,000 வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் நவ 6-
டமான்சாரா புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் இயங்கி வரும் புக்கிட் கியாரா வெல்ஃபேர் மற்றும் சமூக நல இயக்கத்திற்கு 20,000 வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் கடந்த சனிக்கிழமை தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

மனிதவள அமைச்சர் சிவகுமார் சார்பில் 100 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு புத்தக பைகள் மற்றும் 100 முன்னாள் தோட்டப் பாட்டாளிகளுக்கு இளம் தொழில் அதிபர் செல்வம் சார்பில் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு தோட்டப் பாட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை நல்கினர்.

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு 30 ஆயிரம் வெள்ளியும் புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் கிளப் வெல்ஃபேர் மற்றும் சமூக நல இயக்கத்திற்கு 20 ஆயிரம் வெள்ளியும் வழங்குவதாக அமைச்சர் சிவகுமார் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles