
போர்களத்தில் இருக்கும் வீரனின் வால்முனையை விட செய்தியாளர்களின் கையில் இருக்கும் பேனாவுக்கு கூர்மை அதிகம்.
தவறுகளை சுட்டிக்காட்டவும் தட்டிக் கேட்கவும் செய்தியாளர்கள் எந்த அளவு முக்கிய பங்காற்றுகிறார்களோ அதைவிட ஒரு நாட்டின் முன்னேற்றத்யிலும் மேம்பாட்டிலும் அவர்களுடைய பங்கு அடங்கியிருக்கின்றது.
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பொறுப்பில் அமர்ந்து ஓராண்டு நிறைவடையப் போகிறது. இந்த வேளையில் அந்த ஓராண்டு பூர்த்தியோடு தீபாவளி கொண்டாட்டத்தையும் இணைந்து கோண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமரின் செயளாலர் டத்தோஶ்ரீ ஷம்சூல் இஸ்கண்டார் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கான் ஏற்பாட்டில் நாட்டில் இருக்கின்ற தமிழ்ப்பத்திரிக்கை ஊடகங்களுக்கான தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு கூறினார்.
பிரதமர் துறை இந்தியர்களுக்காக பல்வேறு நலத்திட்டாம்க்களையும் நற்செய்திகளையும் கொண்டிருப்பதாகவும் அதுகுறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் சண்முகன் மூக்கன் குறிப்பிட்டார்.

