


மோரிப், நவ 6-
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் மற்றும்
HRD Corp நிறுவனத்தின் மூலமாக கோலலங்காட் மாவட்டத்தில் 300 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை Pejabat Penyelaras Parlimen Kuala Langat dan Ahli Ahli Majlis India MPKL மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அன்பளிப்பு B40 குடும்பங்களுக்கு ஓரளவு உதவுகிறது.
இந்த உணவுக் கூடை நன்கொடையின் விநியோகம் Dun Morib (Dewan Serbaguna Morib) தொடங்கி Dun Sijangkang (Kuil Sri Maha Mariamman Ladang Telok) முடிவடைந்துள்ளது.
வேறு எந்த உதவியையும் பெறாத இந்த 300 குடும்பங்களுக்கு இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளது.
கோலலங்காட்டில் வசிப்பவர்கள் மீது சிறப்பு அக்கறை காட்டிய மனித அமைச்சர் சிவகுமாருக்கு கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் இந்திய கவுன்சிலர்கள் சார்பில் ஆயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், கவுன்சிலர் கமலநாதன், உமா நந்தினி, பன்னீர் செல்வம் ஆகியோர் 300 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை முறையே ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

