பந்திங் கிளானாங் பாரு மாரியம்மன் ஆலயத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி 50,000 வெள்ளியை வழங்கினார் அமைச்சர் சிவகுமார்!

கிளானாங் பாரு மாரியம்மன் ஆலயத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி
50,000 வெள்ளியை வழங்கினார் அமைச்சர் சிவகுமார்!

கோலாலம்பூர் நவ 6-
கோலலாங்காட் பந்திங், கிளானாங் பாருவில் 115 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில் புதிய ரதத்தை வாங்கியுள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட மனித வள அமைச்சர் வ சிவகுமார்,
ஆலய நிர்வாகம் புதிதாக வாங்கியிருக்கும் புதிய ரதத்திற்கு 50,000 வெள்ளியை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் இன்று கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையை ஆலயத் தலைவர்
ரெங்கநாதன் ஏழுமலையிடம் நேரடியாக ஒப்படைத்தார்.

இந்த தருணத்தில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஆலயத் தலைவர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles