பேராக் மாநில மலையாளிகள் சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார்30,000 வெள்ளி மானியம்!

ஈப்போ நவ 20-
பேராக் மாநிலத்தில் இனம் பாராமல் அனைத்து இனத்தவர்களுக்கும் உதவி வரும் பேராக் மாநில மலையாளிகள் சங்கத்திற்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் 30,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஈப்போவில் பேராக் மாநில மலையாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

பேராக் மாநில மலையாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோபாலன் நாயர் மற்றும் நடப்பு தலைவர் எஸ். கோபி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் சிவகுமார், பேராக் மாநிலத்தில் மலையாளிகள் சங்கத்தின் சமூக பணிகள் மேன்மேலும் தொடர 30,000 வெள்ளியை வழங்கினார்.

மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.

குறிப்பாக சொக்சோவின் இல்லத்தரசிகளுக்கான சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இந்திய இல்லத்தரசிகள் அதிக அளவில் பங்கேற்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தீவேட் தொழில் திறன் கல்வி பயிற்சி மற்றும் சொக்சோ நிறுவனத்தின் சமூக நல திட்டங்கள் மூலம் மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் அமைச்சர் சிவகுமார் விரிவான விளக்கங்களை அளித்தார்.

இதனிடையே தக்க தருணத்தில் பேராக் மாநில மலையாளிகள் சங்கத்திற்கு 30,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேராக் மாநில மலையாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோபாலன் நாயர் மற்றும் நடப்பு தலைவர் கோபி ஆகியோர் தெரிவித்தனர்.

பேராக் மாநில மலையாளிகள் சங்கம் தொடர்ந்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் என்று அவர்கள் இருவரும் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles