உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு பீனாஸ் முதல் முன்னுரிமை வழங்க வேண்டும்:- யுவனேஸ்வரன் வலியுறுத்து.

உள்நாட்டு படைப்பாளர்களான கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பீனாஸ் எனும் தேசிய திரைப்பட மேன்பாடு கழகத்தின் நிதி ஒதுக்கீடு முறையாக கிடைக்கப்படுவதில்லை என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுவனேஸ்வரன் வலியுறுத்தினார்.

இதன் தொடர்பாக உள்நாட்டு கலைஞர்களிடமிருந்து தமக்கு அதிகமான புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் தொட்டு பேசிய பொழுது யுவனேஸ்வரன் சுட்டிக் காட்ட்னார்.

உள்நாட்டுக் கலைஞரின் படைப்பான ‘அடை மழைக் காலம்’ அண்மையில் வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்ர்தது மட்டுமல்லாமல் பாராட்டுகளையும் குவித்தது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு இரண்டே வாரங்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுப் படைப்புகளுக்கு வழங்கப்படாத முக்கியத்துவம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் திரைப்படங்களுக்கு அதிகமாகவே வழங்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையினால் பாதிக்கப்படுவது நமது உள்நாட்டுக் கலைஞர்களும் அவர்களின் படைப்புகளும் தான் என அவர் சுட்டிக் காட்டினார்.

இளைஞர்களை மைய்யக்கருத்தாக கொண்டு மலேசிய படைப்பான ‘நாம் கற்ற இசை’ எனும் திரைப்படம் வெளியிட இருக்கிறது.

இதுபோன்ற நல்ல நல்ல படைப்புகள் தொடர்ந்து வெளியிடவிருக்கும் மலேசிய படைப்புகளுக்கு பீனாஸ் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று யுவனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles