‘இனி எல்லாம் சுகமே’ எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை

காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’. மாற்றம் என்பது எங்கிருந்தோ வராது, நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். பிறக்கப் போகும் புதிய வருடம் மகிழ்ச்சியானதாக அனைவருக்கும் அமைய இது ஒரு பரிசாக இருக்கும். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். அவ்வப்போது நம் வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி தேவை. எண்ணங்கள் தெளிவாக இருந்தால், செயல்கள் நிறைவாக இருக்கும். இலக்கைச் சுலபமாக அடையலாம்.

நாம் ஏற்பாட்டில் நடைபெறும் “இனி எல்லாம் சுகமே” எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் உரையைக் கேட்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 11/12/2023, திங்கட்கிழமை
நேரம் : மதியம் 2 மணிக்கு
இடம் : PJ Civic Centre (MBPJ), பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்

வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத் தட்டாது. அது வரும்போது தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நுழைவு இலவசம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’

குறிப்பிட்ட இடமே எஞ்சியிருப்பதால் ஏமாற்றத்தைத் தவிர்க்க உடனடியாகப் பதிந்து கொள்ளுங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles