மூன்றாவது முறையாக பிரதமராக வர துடிக்கும்
துன் மகாதீரின் செயல்
அரசியல் பைத்தியக்காரத்தனம் !
டாக்டர் இராமசாமி சாடல்

மூன்றாவது முறையாக பிரதமராக வர துடித்துக் கொண்டிருக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமது செயல் அரசியல் பைத்தியக்காரத்தனம் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சாடினார்.

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் பிரதமராக இருந்த போது பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து பின்னர் காலை வாரினார்.

பக்கத்தான் ஹரப்பான் வீழ்ச்சிக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி.

மலேசியர்கள் இனியும் இவரை நம்ப மாட்டார்கள்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை சேர்த்துக் கொள்ள முடியாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துள்ள முடிவை பெரிதும் பாராட்டுகிறேன்.

சுயநலம் கொண்ட துன் டாக்டர் மகாதீரை போல் அரசியல்வாதிகள் இனியும் நமக்கு தேவையில்லை.

பக்கத்தான் ஹரப்பான் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால் வரும் பொது தேர்தலில் மக்களின் ஆதரவை பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles