சிலாங்கூர் மாநில அரசின் இலவசக் காப்புறுத் திட்டத்தில் 34,174 பேர் பதிவு

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கட்டமைப்பின் (எம்.பி.ஐ.) இலவச காப்புறுத் திட்டத்தில் (இன்சான்) பதிவு செய்ததன் மூலம் இதுவரை 34,174 பேர் காப்புறுதி பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி இந்த இலவச காப்புறுதி திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 39,866 பேர் அதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக எம்.பி.ஐ. வர்த்தக வியூகத் துறையின் தலைவர் ராஜா நேர் இஸா ராஜா ஜாபர் கூறினார்.

தகுதி உள்ள விண்ணப்பங்கள் உடனடியாக அங்கீரிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட 40,000 விண்ணப்பங்கள் இ-வாலட் வேவ்பேய் செயலி மூலம் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles