
நீதிமன்ற வழக்கு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 25,000 வெள்ளி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அரசுத் தரப்பு கொண்டு வந்த குற்றச்சாட்டிற்கு எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து கோல குபு பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அஸ்மில் முன்தாபா அபாஸ் (வயது 48) என்பருக்கு நீதிபதி ரஷியா கசாலி இத்தீர்ப்பை வழங்கினார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையை குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

