எனது தீபாவளி விளம்பரத்தில்
தமிழ் எழுத்துக்கள் உள்ளன!
டாக்டர் சத்யா பிரகாஷ் அறிவிப்பு

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது தீபாவளி விளம்பரத்தில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன என்று உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தொகுதி தலைவரும் கெஅடிலான் கட்சி தேசிய துணை செயலாளருமான டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

நான் எப்போதும் தமிழ் மொழிக்கு தமிழ் கலை கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

தீபாவளி விளம்பரத்தில் தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று சில கோமாளிகள் புலன்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மனநோயாளிகள்.

உலு சிலாங்கூர் தொகுதியில் ஏழை மக்களுக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் நிறைய உதவிகளைச் செய்துள்ளேன்.

இதையெல்லாம்
அவர்கள் பேசுவதில்லை.

உலு சிலாங்கூர் தொகுதி மக்களுக்கு எனது சேவைகள் தொடரும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles