
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை நோக்கி ஜொகூர் மாநிலத்தில் நடைபெற்ற சமூக உரையாடல் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் வெறும் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்று இணையத் தளத்தில் செய்தி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தியில் அடிப்படை உண்மைகள் இல்லை. இது ஒரு பொய் செய்தி என்று ஜொகூர் ஜசெக ஆட்சிக்குழு உறுப்பினர் எம். கண்ணன் தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க பக்கத்தான் ஹரப்பான் தொண்டர்களுடன் இந்த சந்திப்பு கூட்டம் நடைபெற்றது என்று கண்ணன் விளக்கம் அளித்தார்.

